பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது - எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

கோவை: பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.



கோவை: பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைந்துள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாஜகவில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் வேட்பாளர்கள் தேர்வு என்பது அவர்களது அரசியல் பின்புலம் மற்றும் அரசியல் சேவை உள்ளிட்டவற்றை கண்டறிந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும், பாஜகவில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பானவர்கள் கொள்கைக்காக உறுதி கொண்டவர்கள் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என தெரிவித்தார். விரைவில் முக்கிய பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.



முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...