சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணியில் ஈடுபடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது - கமல் மீது வானதி சீனிவாசன் தாக்கு..!

சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணியில் ஈடுபடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது - கமல் மீது வானதி சீனிவாசன் தாக்கு..!

கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தொண்டர்கள் பட்டாசு வெடித்து அவரது அறிவிப்பை வரவேற்று கொண்டாடினர்.

செட்டிவீதி, அசோக் நகர் பகுதியில் தொண்டர்களையும், அப்பகுதி மக்களையும் சந்தித்த வானதி சீனிவாசன், பின்னர், பத்திரிகையாளர்களை ‌சந்தித்தார். அவர் பேசுகையில், "வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும், நாளை தான்‌ வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக", தெரிவித்தார்.



"அரசியல் என்பது மக்களுடன் பயணிப்பது.சினிமாவில் நடிப்பதற்கும், மக்கள் பணியில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை தேர்தல் முடிந்து பார்த்துக்கொள்ளலாம்", என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து மறைமுகமாக விமர்சித்தார். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கோவை தெற்கு தொகுதியில் நிறைய நலத்திட்டங்களை வழங்கியுள்ளனர், அதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் இருப்பதால் நிச்சியம் இந்த முறை தங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, என்றார்.



சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக அளவிலான இடங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அதற்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்று வானதி தெரிவித்தார். 

அரசியலில் அனைவரையும் அரவணைத்து போவது முக்கியம் என்றும், அதனாலேயே 18 வயது முதல் கட்சிக்காக உழைக்கும் எனக்கும் வாய்ப்பு ‌கொடுத்திருக்கிறார்கள், இன்று, கட்சியில் சேர்ந்த சரவணன் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். 

நடிகை கௌதமி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் மற்ற திரைத்துறையினரும் பிரச்சாரத்திற்கு வருவார்கள், மத்திய அமைச்சர்களும், தலைவர்களும் பிரச்சாரத்திற்கு வருவது குறித்த அறிவிப்பை கட்சி தலைமை வரும் நாட்களில் வெளியிடும் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...