வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் தார்சாலை சீரமைக்கும் பணியில் மந்தம்; மக்கள் அவதி
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் தார்சாலை சீரமைக்கும் பணி மந்தமாக காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 56 எஸ்டேட்கள் உள்ளன. இங்கு எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான தார் சாலைகளை நகராட்சியின் மூலம் கையகப்படுத்தி, நகராட்சி மூலம் தார் சாலைகளை புதுப்பித்துவருகின்றனர். அதன்படி, வால்பாறையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வால்பாறை பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை பகுதி உள்ளது.

இங்கு பிரதான சாலையில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலையை சீரமைத்து, பராமரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில், தார் சாலையை தோண்டி அப்படியே போடப்பட்டுள்ளதால், பெரிய பெரிய கற்கள் மற்றும் குண்டும் குழியுமாக உள்ளது, எனவும்
இரு சக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக
எஸ்டேட் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, தார் சாலையை விரைந்து சீர் அமைத்து புதிய தார் சாலை போட்டு தரநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.