வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் போட்டி.
கோவை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனி தொகுதியான வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எம்.ஆறுமுகம் (69) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2011 அதிமுக கட்சி கூட்டணியில் வால்பாறையில் வெற்றி பெற்றவர், என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் பின்னணி
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.ஆறுமுகம், வால்பாறை காஞ்சமலை எஸ்டேட்டில் பிறந்தவர். கடந்த 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கோவை ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் முழுநேர ஊழியராக தனது பணியைத் தொடங்கினார். இவருக்கு லட்சுமிதேவி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
தற்போது, கோவை வடவள்ளி முல்லை நகரில் வசித்து வரும் இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளராகவும், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், தமிழ்நாடு ஏஐடியுசின் மாநில செயலாளராகவும் உள்ளார்.
அவினாசி எம் எல் ஏ
கடந்த 1980ஆம் ஆண்டு அவினாசியில் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஆறுமுகம், அக்காலத்தில் அவிநாசி பகுதியை தொழில்துறையில் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி, அதனை அறிவிக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், அவினாசி பகுதியில் தொழில்துறை வேகமாக வளர்ச்சி பெற்றது.
வால்பாறையில் வளர்ச்சி பணிகள்
பின்பு, 1989 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டார். 2011 ஆம் ஆண்டு வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதும் மையம், ஆர்டிஓ அலுவலகம், வால்பாறையை சுற்றுலா தலமாக அறிவிக்க வலியுறுத்தல், படகு இல்லம் நிறுவ இவர் காரணமாக இருந்துள்ளார்.இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டா பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.