வால்பாறையில் தமாகா மூத்த தலைவர், கோவை தங்கம் சுயேட்சையாக போட்டி..?
கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) மூத்த தலைவர், மாநில நிர்வாகியான முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்ட மன்றத்தினில் குரல் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்தியதில் முக்கிய பங்கு வகித்தவர், கோவை தங்கம் என்ப
என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லாத நிலையில்,நடைபெறவிருக்கின்ற 2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் கோவை தங்கத்திற்கு வால்பாறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில்,அதிமுக-தமாகா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் தோய்வு ஏற்ப்பட்டதால், வால்பாறை தொகுதி கைநழுவி போனது.
மேலும் அதிருப்தி ஏற்படும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்காமல் வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்தது,தமாகா தலைவர் ஜிகே வாசன் மற்றும் மூத்த கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமாகா தலைவர், ஜி.கே.வாசன் கேட்ட வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர் என்பதால், மீண்டும் தமாகாவினர் மத்தியில் கடும் அதிருப்தியை நிலவி வந்தது. குறிப்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
வால்பாறை தொகுதியை
கொடுக்க மறுத்து வருவதாக, கூறப்பட்டது.
இது குறித்து தமாகா மூத்த தலைவர் கோவை தங்கம் இன்று கோவையில் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தைக்கு சென்ற போது 12 இடங்கள் வேண்டும், என கேட்டோம். ஆனால், நாங்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் வேலுமணி இரட்டை இலை சின்னத்தில் நிற்க சொன்னார், ஆனால் சைக்கிள் சின்னம் ஜி.கே.வாசன் பெற்று கொடுத்த சின்னம் என்பதால் அதில் தான் போட்டியிட வேண்டும், என கேட்டோம். மேலும், எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்வார், எனக் கூறினேன். இதை மனதில் வைத்துக்கொண்டு வன்மத்தை காட்டுகின்றார், என்றார்.
உள்ளாட்சி தேர்தலில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தமாகாவிற்கு ஒரு ஊராட்சி கவுன்சிலர் சீட்டு கூட கொடுக்கவில்லை. அருகாமையில், உள்ள சட்டமன்ற தொகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டுமென அமைச்சர் எஸ் பி வேலுமணி நினைப்பதாக, கோவை தங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
வால்பாறையில் உள்ள மக்கள், தன்னை தொடர்பு கொண்டுசுயட்சியாக நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் எனவும்
இது குறித்து, புதன்கிழமை முடிவெடுப்பதாக வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் தெரிவித்திருக்கின்றார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் அமுல் கந்தசாமி வால்பாறையில் நிச்சயமாக வெற்றி பெற முடியாதேன்பது போன்று கோவை தங்கம் பேசுவதனால்,வால்பாறையின் 2021ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் அப்பகுதி மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், கோவை தங்கம் சுயேட்சையில் போட்டியிட்டால் கனிசமான வாக்குகளை பெறுவார் என்றும் பேசப்படுகிறது.