கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவிற்கு, அதிமுக தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவிற்கு, அதிமுக தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி.


கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று அறிவித்தது. இதில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார், என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடும் தகவலை தெரிவித்ததுடன், அவருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள், என உறுதியளித்தார். 

இந்த சந்திப்பின் போது அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...