பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய 2 திமுகவினரிடம் விசாரணை
கோவை: பொள்ளாச்சி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு செய்தி பரப்பியதாக திமுகவைச் சேர்ந்த இருவரை கைது செய்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும் தற்போது பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பி தவறான கருத்துகளை, திமுகவைச் சேர்ந்த பட்டீஸ்வரன் மற்றும் தாஸ் பிரபு என இருவரும் பதிவு செய்து வருவதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து, பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்தகோவை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளராக பதவி வகித்து வரும் மரப்பேட்டை வீதியை சேர்ந்த பட்டீஸ்வரன் மற்றும் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்ததிமுக பிரமுகர் தாஸ்பிரபு உள்ளிட்ட இருவரையும் கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பின்னர், அவர்கள் மீது துணை சபாநாயகர் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி தேர்தல் நேரத்தில் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.