கோவை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பித்து ஓட்டம்; உடுமலை அருகே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
கோவை: கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்றம் புரிந்தசிறுவர்களுக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது.இதில், நேற்று மாலை 6 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், நள்ளிரவு உடுமலை அருகே 6 சிறுவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கோவைக்கு கொண்டு வந்தனர்.
தப்பியோடிய சிறுவர்கள்
கோவை, அவினாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் இந்த இல்லத்தில் வைக்கபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு சாப்பிடுவதற்காக 11 சிறுவர்களை அறையிலிருந்து திறந்து விட்டனர், அப்போது, ஆறு சிறுவர்கள் வார்டனை தாக்கி விட்டு அறையில் வைத்து பூட்டினர்.
மற்ற ஐந்து சிறுவர்களை, மற்றொரு அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பினர். அவர்கள் கூச்சலிட்டும் வெளியே கேட்கவில்லை.பின், இரவு 11 மணிக்கு, வார்டன் அறை கதவை உடைத்து வெளியே வந்து போலீசுக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக தனிப்படை அமைத்து தப்பிய சிறுவர்களை தேடி வந்தனர்.
ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையங்களில் தீவிரமாக தேடி தேடி வந்த நிலையில், உடுமலை அருகே ஆறு சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கோவை அழைத்து வரப்பட்டன.