ரூ.3 லட்சம் பைக்குக்காக உயிர் நண்பரை கொன்ற இளைஞர் கைது

பொள்ளாச்சி; 3 லட்ச ரூபாய் பைக்குக்கு ஆசைப்பட்டு உயிர் நண்பரை கால்வாயில் தள்ளி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி; 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்குக்கு ஆசைப்பட்டு உயிர் நண்பரை கால்வாயில் தள்ளி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.



பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்த புருஷோத்தமன். பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாயார் சரோஜினி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என புகார் அளித்தார்.

புகாரின் பேரில் புருஷோத்தமனை போலீசார் தேடி வந்தனர்.



புருஷோத்தமனின் நெருங்கிய நண்பரான சேத்துமடையை சேர்ந்த உதயகுமாரிடம் இருந்து புருஷோத்தமனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விலை உயர்ந்த பைக்குக்கு ஆசை பட்டு நண்பரை காண்டூர் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து உதயகுமார் மீது பைக் திருட்டு, கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை அவிநாசி சிறையில் அடைத்தனர்.

புருஷோத்தமனின் உடலை கடந்த 3 தினங்களாக திருமூர்த்தி அணை, கால்வாய் பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை உடல் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...