கோவையில் 9.40 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டம்

கோவை; கோவையில் 9.40 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை; கோவையில் நடைபெற உள்ள முகாம்களில் 9.40 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு தழுவிய குடற்புழு நீக்க முகாம் முதல் கட்டமாக மார்ச் 15 மற்றும் மார்ச் 18 முதல் 20ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 22 மற்றும் மார்ச் 25 முதல் 27ம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாட்களில் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 1 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் குடற்புழு நீக்க மாத்திரையை பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழு பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் குடற்புழு நீக்க முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டிற்கான முதல் குடற்புழு நீக்க முகாம் வரும் திங்கள்கிழமை துவங்குகிறது.

கோவையில் 19 வயதிற்கு உட்பட்ட 9 லட்சத்து 40 ஆயிரத்து 258 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 1 முதல் 2 வயது வரை உள்ளவர்களுக்கு 200 மில்லி கிராம், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவு மாத்திரைகள் வழங்கப்படும்.

குடற்புழு நீக்க மாத்திரையை உணவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பில் இருந்து மீண்டு குழந்தைகள் ஆரோக்கியத்தை பெறுவர்” இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...