தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு பணம் வாங்கப்படுவதாக மக்களவை எம்.பி ஜோதி மணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தமது முகநூலில் ஜோதி மணி வெளியிட்டுள்ள செய்தியில், “இப்போது காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சியானது தொண்டர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
எனது தலைவர் ராகுல் காந்தி பணம்தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி ஆகி இருக்க முடியாது. இந்த தலைவர்கள், தொண்டர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு.” இவ்வாறு ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
இவரது விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.