கோவை; கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தினமும் நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தினமும் நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.108.16 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதி மூலமாக ரூ.61.80 கோடி கடனாக பெறப்பட்டது. இது தவிர ரூ.30.90 கோடி தமிழக அரசு மானியமாகவும் மற்றும் கோவை மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக ரூ.15.46 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து 6.52 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு ஜெய் நகர் தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவுண்டம்பாளையம் கொண்டு செல்லப்பட்டு தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. இத்துடன் மேலும் கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு என புதிதாக அமைக்கப்பட்ட 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 19 மேல்நிலைத் தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் முடிவடைந்து விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த திட்டத்தின் கீழ் 26 ஆயிரத்து 659 வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படுகிறது,’’ என்றனர்.