கோவை: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மூத்த பத்திரிகையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மூத்த பத்திரிகையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.
இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப்படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.