கோவை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், எஸ்.பி., ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கோவையில் முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்காக நேற்று எஸ்.பி ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலாளர் பழனிச்சாமி, 2006-2011 ல், அமைச்சராக இருந்த போது, ரூ. 44 லட்சம் சொத்து குவித்ததாக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. புலன் விசாரணை அதிகாரியும், தற்போதைய காஞ்சிபுரம் எஸ்.பி.,யுமான சண்முகபிரியாவிடம், எதிர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக வாய்தா போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பணி காரணமாக சண்முகபிரியா ஆஜராக இயலவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.