கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற ஓய்வு பெற்ற காவல்துறை, ராணுவ வீரர்களுக்கு அழைப்பு!

கோவை: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்டப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நல்ல உடல்நிலையில் உள்ள ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், சிறப்புக் காவலர்களாக பணியாற்றிட அழைக்கப்படுகின்றனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல்பிரிவினை தொடர்புகொண்டு ஒப்புகை அளிக்கவும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் 2 நகல்களை சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவில் நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...