நீலகிரி: குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு மற்றும் அ.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் பாரதியாருக்கும் ஏற்பட்ட மோதலின்போது சாந்தி ராமு பாரதியார் நெஞ்சில் குத்து விட்டதால் நெஞ்சு வலித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாந்தி சாமு. இவருக்கும் வெலிங்டன் கண்டோன்ட்மென்ட் வாரிய துணை தலைவர் மற்றும் அ.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளராகவும் உள்ள பாரதியாருக்கும் நீண்ட காலமாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு கண்டோன்மென்ட் வாரிய பகுதிக்குள் நிவாரணப்பணிகளை செய்ய விடாமல் பாரதியார் தடுத்து வந்தார். இதையடுத்து போலீஸ் உதவியுடன் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.
கோஷ்டி பூசல் இருந்து வந்த நிலையில் சாந்தி ராமுவுக்கு மீண்டும் குன்னூர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. தலைமை தற்போது சீட் வழங்கவில்லை. மாறாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கோத்தகிரி வந்த குன்னூர் அ.தி.மு.க. வேட்பாளர் வினோத் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மற்றும் பாரதியாரும் உடன் சென்றிருந்தனர்.

சிலைக்கு மாலை அணிவிக்க படிக்கட்டில் ஏறியபோது அங்கு அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது ஒருவரையொருவர் தள்ளி விட்டனர். அப்போது ராமுவின் ஆதரவாளர்கள் பாரதியாரை நோக்கி அடிக்கப் பாய்ந்தனர்.

பாரதியார் சாந்தி ராமுவை தொடர்ந்து தள்ளிக் கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த சாந்திராமு, பாரதியாரின் நெஞ்சு மற்றும் முகத்தில் குத்து விட்டார். இதனால் அங்கு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அங்கிருந்த மூத்த அ.தி.மு.க.வினர் உடனடியாக பாரதியாரை கீழே இறக்கி அவரை அழைத்துச் சென்று காரில் அமர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரது ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கப்பச்சி வினோத் அனைவரையும் சமாதானம் செய்து ஓட்டு கேட்க அழைத்துச் சென்றார். குன்னூர் வந்த பாரதியார் நெஞ்சுவலி காரணமாக குன்னூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.