வால்பாறையில், கொரோனா அச்சமின்றி அரசு பேருந்தில் நெரிசலில் பயணிக்கும் பொதுமக்கள்: சமூக ஆர்வலர்கள் கவலை!

வால்பாறை: வால்பாறையில், கொரோனா அச்சமின்றி அரசு பேருந்தில் பொதுமக்கள் நெரிசலில் பயணிப்பதால் மீண்டும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறையில், கொரோனா அச்சமின்றி அரசு பேருந்தில் பொதுமக்கள் நெரிசலில் பயணிப்பதால் மீண்டும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவவதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது. கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நிலையில் சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இ-பாஸ் அனுமதியுடன் வர வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா அச்சம் இல்லாமல் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பொது இடங்களில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கொரோனா வைரஸ் பரவும் என்று அச்சம் இல்லாமல் கூட்டம் கூட்டமாகவும், முகக் கவசம் இல்லாமலும் பொதுமக்கள் நடமாடுவதைக் காணமுடிகிறது.



இந்நிலையில் இன்று வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டமாகவும், நெருக்கமாகவும் பேருந்தில் பயணம் செய்வதைக் காண முடிந்தது.

வால்பாறை பகுதியில் 38 பேருந்துகள் உள்ளன. இவற்றில் தற்சமயம் 20 பேருந்துகளே இயக்கப்படுகின்றன.



இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஒரே பேருந்தில் சமூக இடைவெளி இல்லாமல் நெரிசலாக, நெருக்கமாக நின்று பயணிப்பதால் கொரோனா வைரஸ்பரவும் அச்சத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வால்பாறை காவல்துறையினரும், நகராட்சி துறையினரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...