திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் பறிமுதல்!

திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2.40 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2.40 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - அவினாசி சாலை, எஸ்ஏபி சிக்னல் அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் ரக டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். டெம்போவில் ரூ 2,40 லட்சம் மதிப்பிலான 25,10,5 கிலோ பைகளில் மொத்தம் 445 அரிசி மூட்டைகள் எடுத்து வரப்பட்டதாகவும், அவற்றில் விநியோகம் செய்தது போக 252 அரிசி மூட்டைகள் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. மேலும் சோதனையில் அவற்றிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, பறக்கும் படையினர் 252 அரிசி மூட்டையுடன் டெம்போவை பறிமுதல் செய்து திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தினர்.

விசாரணையில், திருப்பூர் - தாராபுரம் சாலை, பொல்லிக்காளிபாளையம் விஜயகுமார் அரிசி ஆலையிலிருந்து அரிசி மூட்டைகள் விநியோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...