கோவை: அவிநாசி தொகுதி ஆதித் தமிழர் பேரவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேரவையின் தலைவர் அதியமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தி.மு.க.வின் 173 வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இந்த நிலையில் நேற்று ம.தி.மு.க., முஸ்லிம் லீக் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 14 பேர் அறிவிக்கப்பட்டனர். அதில் அவிநாசி தொகுதி ஆதித்தமிழர் பேரவைக்கு ஒதுக்கப்பட்டது. அதன் தலைவரான அதியமான் அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 68. அதியமானின் தந்தை பெயர் ராஜு.
அதியமான் அரசு போக்குவரத்துத்துறையில் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நளாயினி என்ற மனைவியும், தேன்மொழி என்ற மகளும், எழிலரசன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக ஆதித்தமிழர் பேரவையின் தலைவராக உள்ளார். ஒய்.ஜி.எஸ் பொதுச் செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
பொதுவாழ்வில் 40 ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஆதி தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மற்றும் கையால் மலம் அள்ளும் இழிவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி பலமுறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.