ஊழல் இல்லாத மாவட்டமாக கோவையை மாற்றுவோம் - மகேந்திரன், மக்கள் நீதி மய்யம்

கோவை: கோவை மாவட்டத்தை ஊழல் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காகவே கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தானும் ஒரே மாவட்டத்தில் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தை ஊழல் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காகவே கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தானும் ஒரே மாவட்டத்தில் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.



இது குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் ஊழலை ஒழிப்பதற்காக மட்டுமே தலைவர் கமல்ஹாசனும் தானும் ஒரே மாவட்டத்தில் போட்டியிட காரணம் என்றார்.

அதேபோல, தங்கள் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட அனைத்து தொகுதிகளையும் வெல்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர் மகேந்திரன் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...