வால்பாறை; ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்ற மாசி சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை; ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா நேற்று இரவு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிவன் கோவிலில் நேற்று மாலை 6 மணி, இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 4 மணி ஆகிய நான்கு காலங்களில் மேளதாளங்கள் முழங்க அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு கால பூஜையின் முடிவிலும் பக்தர்களுக்கு பிரசாதமும், மொச்சைப் பயிறும் வழங்கப்பட்டது.

பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்றனர். வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, பக்தர்கள் சிவபெருமானை துதித்து பாடி சிவன் அருள் பெற்றனர். இந்த சிவராத்திரி திருவிழாவில் வால்பாறை நகரில் இருந்து மட்டுமின்றி சுற்றுவட்டாரத்திலுள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.