கோவையில், வீட்டு வாசலில் நிறுத்திவைத்த தே.மு.தி.க. பிரமுகர் காருக்கு தீ வைப்பு!

கோவை: வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட கோவை குறிச்சி பகுதி தே.மு.தி.க. அவைத்தலைவர் காருக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. காலையில் எழுந்து பார்த்தபோது கார் முழுமையாக தீப்பிடித்து கருகிய நிலையில் காணப்பட்டது.


கோவை: வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட கோவை குறிச்சி பகுதி தே.மு.தி.க. அவைத்தலைவர் காருக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. காலையில் எழுந்து பார்த்தபோது கார் முழுமையாக தீப்பிடித்து கருகிய நிலையில் காணப்பட்டது.

கோவை குறிச்சி பகுதி தே.மு.தி.க. அவைத் தலைவராக இருப்பவர் சின்ன சேட். இவர் நேற்று தனது பணிகளை முடித்துக்கொண்டு இரவு 10 மணி அளவில் வீட்டின் முன் பகுதியில் காரை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார்.



இன்று அதிகாலை 5 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதற்காக எழுந்து வெளியே வந்தபோது காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் கார் முழுமையாக எரிந்து நிலையில் காணப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...