கோவை: கோவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கோவையில் மாநகராட்சி நிர்வாகம் சமூக இடைவெளி, மாஸ்க் உள்பட பல்வேறுவிதமான சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாநகராட்சி சார்பாக அபராதம் வசூல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் கோவை 47-வது வார்டு டெஸ்ட் டூல் பாலம் அருகே உள்ள கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்றனர்.

அப்போது அங்கு சமூக இடைவெளி இன்றி கடையில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால் கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு சமூக இடைவெளி இல்லாமல் கடைக்குள் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.