கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 43 லட்சம் பறிமுதல்: கோவை கலெக்டர் பேட்டி!

கோவை: கோவையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.



கோவை: கோவையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்றுகையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. கலெக்டர் ராசாமணி கையெழுத்து போட்டு தொடக்கிவைத்தார். அப்போது `அனைவரும் வாக்களிப்போம் அனைவரும் மாஸ்க் அணிவோம்' என்ற வாசகம் அடங்கிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14-ஆம் தேதியும் இரண்டாம் கட்ட பயிற்சி 26-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 650 பேர் உள்ளனர். விருப்பமுள்ளவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான கோவை மாநகரப் பகுதிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 120 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை தொடர்பான தகவல் அளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகள் தனியார் நிதிநிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...