கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் கமல்ஹாசன் போட்டி

கோவை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவரது சொந்தத் தொகுதியான பரமக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கோவை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் 2,56, 389 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர். கோவையின் முக்கிய பகுதியான இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் தேசிய மகளிர் அணி துணைத் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கபஉகிறது.

தி.மு.க. கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் தெற்கு தொகுதி கமல்ஹாசன் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். அதனால் கமல்ஹாசனை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...