கோவை: நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை அரசியல் அரங்கம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை: நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளைஅரசியல் அரங்கம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் அன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
வரும் 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் அலுவலகங்களில் 100 மீட்டர் தூரத்துக்குள் இரண்டு வாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் ரூபாய் 10 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 5 ஆயிரமும் ரொக்கமாகவோ அல்லது கருவூலம் மூலம் செலுத்தப்பட்ட சலான் மூலம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை முதல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது.