கோவை: கோவை காந்திபுரத்தில் வரும் 14-ந்தேதி நம்மஊரு சந்தை நடைபெற இருக்கிறது. இதில் குழந்தைகளை மகிழ்விக்க விளையாட்டுகள் இடம்பெறும். அங்கு கதைசொல்லிகளும் வரவிருப்பதால் அனைவரும் பங்கேற்று மகிழலாம்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பவுர்ஹவுஷ் எதிரே உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வரும் 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நம்ம ஊரு சந்தை நடைபெற இருக்கிறது.
இதில் பாரம்பரிய அரிசிவகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள், மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள், வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளாடைகள், அணையாடைகள் கிடைக்கும்.
இதேபோல் உடல் சுத்தப்பொடிகள், வெட்டிவேர் பொருட்கள், சுத்தப்படுத்திகள், தேன் மெழுகில் செய்த சோப்புகள், மருந்துப்பொருள்கள், உடல்பொலிவு பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் பயன்பாட்டு பொருட்கள், சாப்பிட மதிய உணவு, அருந்த மலர் மற்றும் கனிச்சாறு, நீரா பானம் என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்துப் பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் கிடைக்கும். கதைசொல்லிகளுடனும், குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடனும் கலந்து கொண்டு மகிழலாம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். முற்றிலும் ஞெகிழி இல்லா சந்தை என்பதால் எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சி தொடர்பாக மேலும் விவரம் அறிய 9942118080, 9500125125 என்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.