32 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டி!

கோவை: 1989ம் ஆண்டிற்குப் பிறகு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் அதிக அளவிலான தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.


கோவை: 1989ம் ஆண்டிற்குப் பிறகு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் அதிக அளவிலான தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

கடந்த 32 ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாக 187 வேட்பாளர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கடந்த 1989 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 202 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் அதைவிட சற்று குறைவான எண்ணிக்கையில் தான் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு நடந்த அந்த தேர்தலில் 202 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 150 இடங்களை வென்றது.

இந்த நிலையில், திமுகவின் 174 வேட்பாளர்களும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் என மொத்தம் 187 பேர் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 178 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட்டது. தற்போது அதைவிட 4 தொகுதிகள் குறைவு என்றாலும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 187 வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...