கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கேங்மேன் ஒருவர் மின் கம்பத்தில் பழுது நீக்குவதற்காக ஏறிச்சென்று பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்தி நகரில் மின் கம்பம் பழுதானது. இதையடுத்து இன்று மாலை 4 மணி அளவில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்ப்பதற்காக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் வசிக்கும் கேங்மேன் சாய் சந்துரு (வயது 22) என்பவர் வந்தார். அவர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி மின் கம்பத்தின் மீது ஏறி இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு பணி செய்து கொண்டிருந்தார்.

திடீரென அவர் மின்கம்பத்தின் மீது மயங்கி சாய்ந்தார்.
இதைப்பார்த்து அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் கணேசன், அச்சர், பத்மநாபன் ஆகியோர் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்புத் துறையினருடன் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து சாய் சந்துரு மயங்கி விழுந்து இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.