கோவை: உடுமலையில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
கோவை: உடுமலையில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு மாசி மகா சிவராத்திரி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு பூலாங்கிணறு, ராகல்பாவி, வாளவாடி, தளி வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
கிராம மக்கள் வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், உப்பு, பழவகைகளை வீசி ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் மலைவாழ் மக்கள் திருச்சப்பரத்திற்கு மண்டகபடி அமைத்து சிறப்பு வழிபாடு செய்தபின், கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து கோவிலில் கோபுரத்திற்கு பதிலாக சப்பரத்தை வைத்தனர்.
இதனை தொடர்ந்து, திருமூர்த்தி மலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும், அதனை தொடர்ந்து மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.