கோவை: பொள்ளாச்சியில் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தைச் சுற்றி நூறு மீட்டர் சுற்றளவிற்கு கோடுகள் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தை சுற்றியும் 100 மீட்டர் எல்லைக்கோடு வரையும் பணி நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அதற்கான பணிகள் தயாராகி வருகிறது. வேட்பாளர்களுடன் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், வேட்புமனு பெறப்படும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்பாக கூட்டமாக வரக்கூடாது என்று அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பாதைகளில் 100 மீட்டர் தூரம் அளவிட்டு எல்லைக்கோடுகள் வரையும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நாளை முதல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் நாளை முதல் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.