கோவை: முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்து கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படும் என கூறியிருந்தார்.
இதையொட்டி கோவை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் சிறப்பு பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது.

நேற்று மாநகர் முழுவதும் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடமிருந்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் கடைகளுக்கு செல்லக் கூடியவர்களும் முகக்கவசம் அணிந்து உள்ளே அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள், கடை நடத்துபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.