நீலகிரி: உதகை, குன்னூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உதகை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் டாக்டர் எஸ்.சுரேஷ்பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை கவரட்டியில் வசிக்கும் டாக்டர் எஸ்.சுரேஷ்பாபு கண் மருத்துவம் மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணராக கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட செயலாளராக செயலாற்றி வருகிறார்.

இதேபோல் குன்னூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளராக லயன் ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நீலகிரியில் உள்ள முட்டிநாடு அதிகரட்டி ரயின்போ எஸ்டேட்டில் வசிக்கும் இவர் பி.எஸ்சி. படித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசியலில் அனுபவம் இல்லாதவர் என்றாலும் லயன்ஸ் கிளப் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பொது நலப் பணிகள் செய்து வருகிறார்.