கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் ரூ.5 கோடி பதுக்கல்?. தி.மு.க வினர் முற்றுகை, விடிய விடிய பரபரப்பு

கோவை: கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் ரூபாய் 5 கோடி பதுங்கி இருப்பதாக கூறி நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் ரூபாய் 5 கோடி பதுங்கி இருப்பதாக கூறி நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி நகரமைப்பு பொறியாளர் லட்சுமணன் வீட்டில் 5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 



இதை தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மாநகராட்சி பொறியாளரின் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு வந்த பறக்கும் படையினர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி பொறியாளர் அரசு வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் கிடைக்கவில்லை.



தொடர்ந்து, வெகுநேரமாகியும் பறக்கும் படையினர் வீட்டுக்குள் சென்று சோதனை இடவில்லை என திமுகவினர் புகார் தெரிவித்து கோஷம் எழுப்பினர். 



இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இது குறித்து பறக்கும் படையினர் கூறுகையில்:- தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்த பின்பு வீட்டுக்குள் சென்று சோதனை நடத்துவோம், என்றனர். இதனால் நள்ளிரவு முதல் விடிய விடிய அந்த பகுதியில் பரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...