உடுமலை: உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு உடுமலை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 380 வாக்குச்சாவடி மையங்களுக்கான 456 கட்டுப்பாட்டுக் கருவிகள், 456 வாக்குப்பதிவு இயந்திரங்கள்கள், 494 விவிபேட் இயந்திரங்கள் உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாச்சியருமான ராமலிங்கம், தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் கிருஷ்ணவேணி, கோட்டாச்சியர் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.