கோவை: கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு வனத்துறையினர், வருவாய் துறையினர், அறநிலையத் துறையினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, பக்தர்களுக்கு கடந்தவாரம் முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வெள்ளிங்கிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதே போல், நேற்று பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது 2-வது மலைப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். அவரை பார்த்தவுடன் பக்தர் என்பதும் கையில் மலை ஏற்றத்திற்கான தடிகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக வனத்துறையினரும், மலை ஏறக்கூடிய அப்பகுதி மலைவாழ் மக்களும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது:- பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.