கோவை: கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் கடைகளில் 500 ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஒருவர் சிக்கினார். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார்.

கோவை பேருந்து நிலையத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் நேற்று இரவு உலவிக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் கையில் வைத்திருந்த 500 ரூபாயை எடுத்து பழக்கடையில் கொடுத்து பழங்கள் கேட்டனர். பழ வியாபாரி நோட்டை தொட்டுப் பார்த்தவுடன் அது கள்ள நோட்டு என்பதைக் கண்டுபிடித்துள்ளார். உடனடியாக கோவை காட்டூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
போலீசார் வருவதைக் கண்டதும் இரண்டு பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஹம்மது ஜூனைத் மற்றும் அவரது நண்பர் பாசில் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முஹம்மது ஜூனைத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய பாசில் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முஹம்மது ஜூனைத்தை காட்டூர் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் நேற்றிரவு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.