பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. சுகுமார் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்6-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று முதல்கட்டமாக 15 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி. கே.சுகுமார் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் செய்துவரும் சுகுமார் 2001 - 2003-ம் ஆண்டு வரை அ.தி.மு.க.வின் கோவை புறநகர் மாவட்டச் செயலாளராகவும், 2004 - 2006-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1986 - 1991-ம் ஆண்டு வரை பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தலைவராகவும், 1996 - 2000-ம் ஆண்டு வரை ஒன்றியக் குழு உறுப்பினராகவும், 2001 - 2006-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், 2009 - 2014-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கட்சி சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.