பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வாகன நிறுத்த வசதி செய்யப்படாத வணிக வளாக கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தாமல் உள்ளதாக பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்த நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தொடர்ந்து வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர்கள் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள நான்கு கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர். அப்போது பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன நிறுத்த வசதி செய்யப்படாத மற்ற வணிக வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.