கோவை: உதகைக்கு சுற்றுலா வந்த கார் திடீரென தீப்பிடித்தது. இதில் டிரைவர் உள்பட 7 பேர் காயமின்றி உயிர்தப்பினர்.

உதகையில் இருந்து கல்லட்டி செல்லும் பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே கர்நாடகாவில் இருந்து உதகை நோக்கிசுற்றுலா வந்த ஒரு கார் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தஓட்டுனர் சலீம், விஜயலக்ஷ்மி, சபரிஷ், பிரமிளா, பிரேமா, சனவிகா, தனிஷ்கா ஆகியோர் உடனடியாக காரை விட்டு இறங்கியதால் காயமின்றி தப்பினர்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் உதகையில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று காரில் பிடித்த தீயை முற்றிலும் அணைத்தனர்.

ஆனால் கார் பலத்த சேதமடைந்தது. தீ விபத்துக்கு காரிலிருந்த பேட்டரி வயர்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமா? அல்லதுவேறு காரணங்களா? என்பது குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.