கோவை: மருதமலை முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

கோவையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மருதமலை முருகன் கோயில் உள்ளது. இந்நிலையில் கோயிலில் மாதாந்திர உண்டியல் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் பழனி மற்றும் உடுமலையைச் சேர்ந்த உழவாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. மருதமலை கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) விமலா மற்றும் சூப்பிரண்டு உள்ளிட்ட கோவில் நிர்வாகப் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வருடமாக கொரோனா காரணத்தால் மருதமலை முருகன் கோயிலில் தங்கத்தேர் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இதனால் பலர் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் மருதமலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கோயில் துணை ஆணையர் விமலா தெரிவித்தார்.
அனுமதி கொடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று மாலை பஞ்சாமிர்த பிரசாதத்துக்கு மூன்று மாதங்களுக்கான டெண்டர் விடும் நிகழ்வு கோவை அலுவலகத்தில் நடைபெற்றது.