கோவையில் பட்டபகலில் துணிகரம்..! வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை!

கோவை: கோவையில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), இவரது மனைவி சாந்தா (40) இருவரும் வக்கீலாக உள்ளனர். இவர்கள் சபரிபாளையத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளனர். தற்போது அந்த வீடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பராமரிப்பு பணிக்காக தம்பதிகள் கடந்த 25 நாட்களாக அங்கேயே தங்கினார். மணிகண்டன் நகரில் உள்ள வீட்டை ஒரு மூதாட்டி ஒருவர் கவனித்து வந்தார். அதன் பின்னர் அவர்களது உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவியுடன் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது, மெத்தைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதமாக தடயங்களை சேகரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...