கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், முன்னேற்பாடுகள்: கலெக்டர் நேரில் ஆய்வு!

கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள்‌ அரசு பெண்கள்‌ பாலிடெக்னிக்‌ கல்லூரியில்‌ வைக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தேர்தல்‌ அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கு.ராசாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள்‌ அரசு பெண்கள்‌ பாலிடெக்னிக்‌ கல்லூரியில்‌ வைக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தேர்தல்‌ அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கு.ராசாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தல்‌ முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கோயம்புத்தூர்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கு.ராசாமணி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள்‌ வைக்கப்பட்டுள்ள அரசு பெண்கள்‌ பாலிடெக்னிக்‌ கல்லூரிக்கு நேரில்‌ சென்ற அவர் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. மேலும்‌, மாதிரி வாக்குப்‌ பதிவு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ வாக்குச்‌ சாவடி மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்‌போது, கவுண்டம்பாளையம்‌ தொகுதி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும், வருவாய்‌ கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன்‌, கோயம்புத்தூர்‌ (வடக்கு) தொகுதி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான முருகேசன்‌, வட்டாட்சியர்‌ மகேஷ்‌ மற்றும்‌ உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ உள்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தேர்தல்‌ பணிகள்‌ சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். தேர்தல்‌ பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும்‌ வகையில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ நிலையிலும்‌, துணை ஆட்சியர்‌ நிலையிலுமான அலுவலர்கள் தலைமையில்‌ பல்வேறு பணிகளைப் பிரித்து குழு அமைத்து பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கோயம்புத்தூர்‌ வடக்கு சட்டமன்ற தொகுதியில்‌ உள்ள வாக்குப்பதிவு மையமான சி.எம்‌.எஸ்‌.மெட்ரிக்‌ மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம்‌ சட்டமன்ற தொகுதியில்‌ உள்ள இளங்கோ மெட்ரிக்குலேசன்‌ உயர்நிலைப்பள்ளி, ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர்‌, கழிப்பிடம்‌, மின்சார வசதி, முதியோர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ எளிதாக வந்து செல்ல ஏதுவாக சாய்வு தளம்‌ ஆகிய வசதிகளை செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடையவும்‌, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும்‌ வாக்குப்பதிவை செலுத்த வலியுறுத்தும்‌வகையிலும்‌ சுவரொட்டிகள்‌, குறும்படங்கள்‌ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள்‌ மூலமாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதனடிப்படையில்‌, சட்டமன்ற தேர்தலுக்கான மாதிரி வாக்குப்‌ பதிவு கிரஸ்கட்‌ சாலை, மற்றும்‌ சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில்‌ இன்று நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல்‌ அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான‌ கு.ராசாமணி நேரில்‌ பார்வையிட்டார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...