கோவையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி 90% முடிவடைந்தது - ஆட்சியர்
கோவை: கோவை மாவட்டத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு பிரித்தனுப்புவதற்கான இணையதள வாயிலான குலுக்கல் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரமுகர்கள் முன்னிலையில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது.
அதன்படி, 5316 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5894 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் மேட்டுப்பாளையம்,சூலூர்,கவுண்டம்பாளையம்,கோவை வடக்கு,தொண்டாமுத்தூர்,கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பும் பணி இன்று முதல் துவங்கியது.
இவ்வாறு அனுப்பப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள காப்பு அறையில் வைக்கப்பட்டு வருகிறது. இம்மின்னனு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மீண்டும் இரண்டாம் முறை இளையதள குலுக்கல் நடத்தப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் இதுவரை 90 சதவீத மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பபட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் இந்த பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர்.