தடாகம் பள்ளத்தாக்கில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கக் கோரி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

கோவை: தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கக் கோரி பல்வேறு இயக்கங்கள் இணைந்து கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கக் கோரி பல்வேறு இயக்கங்கள் இணைந்து கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் கனிமவள கொள்ளையை கண்டித்தும், சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கம், தடாகம் பள்ளத்தாக்கு கனிம வள பாதுகாப்புக் குழு, சமூகநீதி பஞ்சமி நில மீட்பு இயக்கம், கௌசிகா நதி உழவர் குழு மற்றும் கோவை மாவட்ட இளைஞர் சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய இயக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 52 ஆயிரம் யூனிட் செம்மண் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள்மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.



அரசு துறையினரிடம் எந்த அனுமதியும் பெறாமல், சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய மின்வாரியத்துறை அலுவலர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...