கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர்கள்..!

கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள். 15 லட்சத்து 52 ஆயிரத்து 699 பெண்கள். 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். கோவை (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை, தெற்கு சட்டமன்ற தொகுதி.



கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள். 15 லட்சத்து 52 ஆயிரத்து 699 பெண்கள். 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். கோவை (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை, தெற்கு சட்டமன்ற தொகுதி.

முக்கிய இடங்களை உள்ளடக்கிய கோவை தெற்கு தொகுதி

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு, பல அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த தொகுதியில் அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாநகர் காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம், காந்திபுரம் பஸ் நிலையம், தனியார் மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட மாவட்டத்தில் முக்கிய பகுதிகளாக கோவை தெற்கு தொகுதி விளங்கி வருகிறது.

தெற்கு தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற அதிமுக..!

இன்னமும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக கோவை தெற்கு தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே கடந்த 2016-ஆம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ, இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி, வானதி சீனிவாசனும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மிகுந்த பேச்சு வார்த்தைகளின் முடிவில், வானதி சீனிவாசன் தான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார், என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணி வேட்பாளர் யார்..?

மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் மயூரா ஜெயக்குமார் இந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். அதே போல், திமுக சார்பில், மீனா ஜெயகுமார் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கோவை சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் முக்கிய பெண் வேப்பாளராக மீனா ஜெயகுமார் பேசப்படுகிறார்.

மக்கள் நீதி மையத்தின், துணை தலைவர் போட்டி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு, 1,45,104, வாக்குகளை (11.60%) பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின், மாநில துணை தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார், என்று கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதால், கோவையில் விஐபி தொகுதியாக கோவை தெற்கு தொகுதி மாறி உள்ளது.

ஏற்கனவே, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக உள்ள எஸ். பி வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.கடந்த முறை பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அதனால், கோவை சட்டமன்ற தொகுதி, விஐபி தொகுதியாக மாறியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...