லாரி வாடகை உயர்த்தி தரக்கோரி பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

பொள்ளாச்சி: லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


பொள்ளாச்சி: லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

டீசல் விலை உயர்வு, லாரி உதிரி பாகங்கள் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வை கருத்தில்கொண்டு கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை உயர்த்தி வழங்கக் கோரி பொள்ளாச்சியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மூன்று நாட்கள் நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி வாடகையை உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...