கோவை: கோவையில் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக வந்த புகாரை அடுத்து வட்டார போக்குவரத்து ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் இடமாற்றமும் அளிக்கப்பட்டது.

கோவை பீளமேட்டில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்காக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு அங்கு சென்றார். ஓட்டுனர் உரிமத்துடன் கூடுதலாக இரண்டு புகைப்பட அட்டை வழங்கப்பட வேண்டும் என்றால் ரூபாய் 100 கொடுக்க வேண்டுமென்று அங்கிருந்த ஊழியர் சக்தி கேட்டதாக தெரிகிறது. மேலும் அவர் இதுபோன்று ஏராளமானோரிடம் பணம் வசூலித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையாளருக்கு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு புகார் மனு அனுப்பினார். அந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதையடுத்து வட்டார போக்குவரத்து ஊழியர் சக்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் அவிநாசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.