கோவை: கோவையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இன்று மனைவியை சேர்ந்து வாழ கணவர் அழைத்தார். வர மறுத்த மனைவியை ஜவுளி வியாபாரி அரிவாளால் வெட்டி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). துணி வியாபாரியான இவருக்கு கல்பனா என்ற மனைவியும் அஜித், கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கல்பனா தனது கணவரைப் பிரிந்து அதே பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வந்தார். இன்று காலை கல்பனா பால் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது ரவி மீண்டும் அவரை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார்.
அப்போது கல்பனா மறுக்கவே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய அவர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்து விடுவார்களோ என்று பயந்தார். இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு சென்ற அவர் அந்த வழியாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் மற்றும் அந்த எல்லைக்குட்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.