கோவை: கோவையில் அத்துமீறிய டி.எஸ்.பி.ஐ கைது செய்ய வலியுறுத்தி போக்குவரத்து அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும், பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோவையில் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2ம் தேதி உக்கடம் வழித்தடத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், அரசுப் போக்குவரத்து ஓட்டுனருமான வேளாங்கண்ணி ராஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த போது பேருந்தை மறித்து காவல்துறை டிஎஸ்பி ஜெரால்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார்.
மேலும் ஓட்டுனரை தாக்க முயன்றுள்ளார். காவல்துறை அதிகாரியின் திடீர் நடவடிக்கையின் காரணமாக வேளாங்கண்ணி ராஜ் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைக்கண்ட பயணிகள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் அரணு போக்குவரத்து ஓட்டுனருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேளாங்கண்ணி ராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறை பினையில் வெளிவரமுடியாத வழக்கை பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுனர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் வேளாங்கண்ணி ராஜாவை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இத்தகவல் போக்குவரத்து ஊழியர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், சம்மந்தப்பட்ட டிஎஸ்பிஐ கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் போக்குவரத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் எல்பிஎப் மண்டல பொருளாளர் பாபு, ஐஎன்டியுசி தெளத்கான், ஏஐடியூசி சண்முகம், டிடிஎஸ்எப் வில்லியம், எம்எல்எப் ரவி, எம்எல்எப் குமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்று காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.